(தமிழ் வருஷ்பிறப்பு அதுவுமா ஒரு தமிழ் பதிவு போடலைனா உம்மாச்சி கண்ணை குத்தி்டும்ங்கர பயத்துல போட்ட மொக்கை பதிவு தான் இது. படிச்சுட்டு வழக்கம் போல காரி துப்ப மறக்காதீங்க. For those who cant make head or tail out of whatever is typed below...You-Tube Video hai Naa :-))
என்ன பண்ணலாம்? சொல்லலாமா வேண்டாமா? அடிச்சுடானா? சே சே...அடிக்க மாட்டா. இருந்தாலும் கோவப்பட்டு அடிக்க வந்தா என்ன செய்யலாம்? டக்குனு கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டியது தான். இல்லைனா "அந்த கோவிந்து பையன் தா நீ அழவே மாட்ட னு பேட் கட்டினான" னு சாக்கு சொல்லி மொக்கை போட வேண்டியது தான்.
ஹும்ம்ம்ம்...அதிசயமா தனியா இருக்கா. எப்பவும் கூட மூணு நாலு பிசாசுங்க சேர்ந்து இருக்கும். ஓகே ஓகே. இன்னைக்கி சொல்லிட வேண்டியது தான். ஹயயோ....மஞ்சள் கலர் சல்வார், பச்சை கலர் துப்பாட்டால தேவதை மாதிரி இருக்கா. டேய் டேய்....ரொம்ப ஜொள்ளு விடாதே. ..காரியததுல கண்ணா இருக்கணும். ஹும்ம்ம்...நம்ம கிட்ட இருக்கிற சட்டை, பேண்ட், பணியன் ,ஜேட்டீ எல்லத்தோடும் விலை குட்டி கழிச்சு பார்த்தா கூட அவ ஹாண்ட் பேக் கூட வாங்க முடியாது. அவ செருப்பு பாரு....அதை பாத்தாலே தெரியுது அவ அப்பன் இண்பொஸீச், விப்ரொ, டாடா ஷேர் எல்லாம் வெச்சிறுப்பாரு போல. நம்ம? இன்னும் டாடா கம்பெனி நா உப்பு, தீ தூள் தயார் பண்ற கம்பெனி னு நம்ம வீட்டுல நினச்சிண்டு இருக்காங்க. நமக்கும் அவளுக்கும் ஏணி என்ன கிரேன் வெச்சா கூட எட்டாது.
"என்ன மாப்பு. இங்கே கண்டீன் பக்கம்?" வந்துட்டாரு கேள்வியின் நாயகன்.
"தலையோட சிவாஜி படம் டிக்கெட் இங்கே தரதா சொல்லி இருக்காங்க....அதை வாங்கிட்டு போலாம்னு வந்தேன். நீ என்ன தசாவதாரம் டிக்கெட் வாங்க வந்தியா?"
"மாப்பு க்கு எப்பவுமே நக்கல் தான் போ"
போடா போடா....வேலைய பாத்துட்டு போ...வந்துடானுங்க. நாலு பிள்ளைக்கு அப்பா மாதிரி இருக்கான்...இவன் மாணவன். ஹும்ம்ம்....அவ ப்ரூட்டி குடிக்கிறா. கொடுத்து வெச்ச Straw. அவளோட ஒப்புதலோட அவ உதடுகளை வறுடுது.எப்படி ஆரம்பிக்கிறது னு தெரியலையே. ஓடி போயிடலாமா?
"ஹேய் சாகர். எப்படி இருக்க? என்ன இந்த பக்கம்"
"ஹேய் சரிதா. சும்மா தான். இங்கே உட்காரலாமா?"
"ஹும்ம்ம்...உட்காரு. என்ன படிச்சு முடிச்சுட்டியா?" நாம படிக்கிறதே அந்த ஒரு மாசம் செமேஸ்டர்ல தான். படிக்கலை நா சங்கு ஊத வேண்டியது தான்
"ஏதோ படிச்சிருக்கேன்."
"இப்படியே சொல்லு. ஆனா மார்க் வந்து பார்த்தா நீ தான் முதல் ராங்க் வாங்கி இருப்ப" சொல்லிட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டா. ஹயயோ...சிரிப்பாலையே சிக்ஸர் அடிக்கிறாளே.
ஹும்ம்ம்....எங்க படிக்கிறது? எந்த புத்தகத்தை திறன்து வெச்சாலும் உன் ஞாபகம் தான் வருது. Fluid Dynamics எடுத்து வெச்சா உன்னை நினைச்சு வாய்லெருந்து Fluid வருது. Thermodynamics எடுத்து வெச்சா உன்னை நினச்சு புகை விடுரேன். Gear Teeth படிக்க போனா உன் அரிசி பல்லு தான் ஞாபகம் வருது. அட நல்லா இருக்கே....இதையே சொல்லி பார்க்கலாமா???
"சாகர். உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்"
என்ன "ஒண்ணு" னு சொல்ல போறாளா? சே...முதல்ல லொள்ளு சபா பார்க்கிறதை நிறுத்தனும்.
"உனக்கு சதிஷ தெரியும் இல்ல?
அவனை தெரியாதா. College ரோமியோ. ஒரு பொன்னையும் விட்டு வெச்சது இல்ல. சரிதா பின்னாடியும் Route விட்டான்...அங்க பருப்பு வேகலை...அவ செருப்பு காட்டினா. இப்போ எதுக்கு அவன பத்தி சொல்றா?
"எனக்கு அவனை முதல்ல பிடிக்கவே இல்லைடா. ஆனா இப்போ அவன் ரொம்ப மாறிட்டான் தெரியுமா? அன்னைக்கி நான் பார்க்கிறேன் னு தெரிஞ்ச உடனே சிகரெட்டை தூக்கி போட்டுட்டான்"
அடி பாவி. இதுக்கா இந்த பில்ட் அப் தர? நீ மட்டும் ஆமா னு சொல்லு, நம்ம வழுக்கை மண்டை HOD ஐ மேல் மாடி லேருந்து தூக்கி போட்டிடுரேன். இதே மாதிரி ஒரு வசனம் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே?
"எனக்கு அவனை பிடிச்சிருக்கு டா. ஆனா எப்படி சொல்றது னு தெரியல. எனக்கு ஹெல்ப் பண்ணுவியா டா?"
ஆஆஆஹஹஹ.....டமார். அடி பாவி. சாவடீச்சுட்டாளெ. நான் காதலன் ஆகலாம்னு நினைச்சேன். இப்படி மினசாரம் மாதிரி தாக்கி என் கனவை எல்லாம் பொசுக்கிட்டாளெ. இதுல இந்த Cupid வேலைய வேற நான் தான் பார்க்கணுமா? என்ன கொடுமை சரவணன் இது?
டேய்...நீங்க ரெண்டு பேரு யாருடா? எங்கிருந்தோ பின்னாடி லேருந்து ஓடி வந்து வயலின் வாசிக்கறீங்க? ஓ...சோகமா இருக்கேன் ங்கரதுக்கு எப்பெக்ட் கொடுக்ககறீங்களா? இதுல S A ராஜ்குமார் மாதிரி ஒரு லா லா லா வேற. அடீங்க.........ஓடி போங்க டா.
அழாதே டா கண்ணா பப்ளீக் ஆ அழுதா நம்ம இமேஜ் என்ன ஆகிறது. சிரி சிரி....அய்யோ இப்படி அசிங்கமா இஞ்சி தின்ன குரங்கு மாதிரி சிரிக்காதே டா.
"அதுக்கென்ன சரிதா. சொல்லிடட இல்ல. ஜமாய்சிடலாம்"
"தாங்க்ஸ் டா. எனக்கு தெரியும் நீ தான் எனக்கு ஹெல்ப் பண்னுவ னு"
ஆமா. என் முஞ்சில தான் இளிச்சவாயன் னு ப்ளாஸ்தீரீ போட்டு எழுதி ஒட்டி இருக்கே. "காதல் சொல்ல மற்றும் சொல்ல வைக்க என் கிட்ட வாங்க" னு ரமேஷ் கார்ச் மாதிரி விளம்பரம் தான் கொடுக்கணும்.இப்படியே அரை குறையா சிரிச்சுக்கிட்டே வெளில போயிடலாம்....அப்புறம் இருக்கவே இருக்கு Kalyaani or KingFisher....கொஞ்ச நேரம்...அந்த கதவு தாண்டிடா போதும்...எல்லாம் முடிஞ்சுடும்..
"கட்....பட்டையை கெளப்பிட்டீங்க சார். எண்ணமா பீலிங் தறீங்க. ஒரே டேக் ல முடிச்சுட்டீங்க." வந்துட்டான் ஜால்ரா Director.
"அடுத்த சீன் கேட்டீங்க நா அசந்துடுவீங்க சார். இப்படி ஒரு சீன் இது வரைக்கும் யாருமே எடுதததே இல்ல".
டேய் நாயே. இப்படி சொல்லி தாண்டா போன சீன் காதல் கொண்டேன் லேருந்து சுட்டு இருக்க. எடுக்கிறது ஒரு வீணா போன கல்லூரி காதல் கதை...இதுல இனிமே என்னடா புதுசா பண்ண போற? பத்து வருஷமா கல்லூரில படிக்கிறது இந்த பாழா போன சினிமா ஹீரோக்களா தான் இருக்கணும்.
"எனக்கு கொஞ்சம் தலை வலிக்கிறது. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்டுடுறேன்". யப்பா சாமி....தமிழ் சினிமாவை எங்களை மாதிரி மொக்கை பசங்க கிட்டேறுண்து நீ தான் காப்பாத்தனும்.
"That was a good scene Sir" மும்பை புது வரவு. கொஞ்சம் சேவப்பா கொழு கொழு னு மும்பாய்க்காரியா இருந்தா உடனே புக் பண்ணிடுறாங்கப்பா. கொஞ்ச நேரம் கடலை போடலாம்னு பார்த்தா Caravan லேருந்து பொண்டாட்டிக்காரி முறைக்கிறா.
நாம சினிமா ஹேரோ சினிமால தான் பத்து பேரை ஒரே நேரத்துல அடிக்க முடியும். நிஜத்துல? Caravan ல பொண்டாடிக்காரி சொல்ல முடியாத வார்த்தைகளால திட்டுவா. இதை வெளில சொல்லணும் னு தான் நினைக்கிறேன்...ஆனா........