Thursday, May 14, 2009

தலைவன் இருக்கிறான்


இன்று தேர்தல் பிரசார மேடை


இப்பொழுதுதமிழின் விடிவெள்ளி“, “ஏழைகளின் காவலன்“, “அஞ்சாநெஞ்சன்நம் எல்லோருடைய பாசத்துக்குரிய நா. கா. மு. கட்சியின் தலைவர் அருமைஅண்ணன்பேச வருகிறார். (கரகோஷங்கள்)

என் ரத்தத்தின் ரத்தங்களே, தமிழ் தாயின் அன்பு முத்தங்களே” (மீண்டும் கரகோஷங்கள்)


மேடையில் அமர்ந்திருக்கும் நம் கூட்டணி கட்சி தலைவர்களான போ.று. .கி கட்சி தலைவர் சை.கோ அவர்களே, மற்றும் அடுத்த முதல்வர் ஆக போகும் என் அன்பு சகோதரி . . தே. சி கட்சி தலைவியான நம்அக்காஅவர்களே, உங்களுக்கு என் வணக்கங்கள்.” (கரகோஷங்கள்)

நீங்கள் நினைப்பீர்கள், நான் உங்கள் முன்னால் நின்று இன்று தேர்தலுக்காக வாக்கு பிச்சை கேட்க போகின்றேன் என்று. இல்லை. மாறாக உங்களை எச்சரிக்கின்றேன்.” (கூட்டத்தில் சலசலப்பு)

ஆம். எங்களை தெருந்தேடுக்கவில்லைஎனில், நீங்கள் உங்கள் வாழக்கையை இருட்டடித்து கொள்வீர்கள் என்று எச்சரிக்கின்றேன். இந்த கரங்களை பாருங்கள். இது உங்களுக்காக உழைத்து, உங்களுக்காக வாரி வழங்கி சிவந்து போன கரங்கள். இது அப்பழக்கற்ற ஏழைகளின் காவலனின் கரங்கள்.”


சில மாதங்களுக்கு முன்


அண்ணே. யாரோ உங்கள பார்க்க வந்திருக்காப்ல.”

வந்தவர் பெரிய கூழை கும்பிடு போட்டார். பெரிய கும்பிடு என்றால் கேட்ட விலை என்பது அண்ணனின் எழுதப்படாத அனுபவம்.

அண்ணனுக்கு ஞாபகம் இருக்குமானு தெரியல. போன தடவை நாம ஜாதி சங்கத்துல விழா எடுத்தப்ப தலைவருக்கு பெரிய ஆளுயர மாலை போட்டு ஏரியா முழுக்க பிரமாண்டமா கட் அவுட் வெச்சு அமர்க்கள படுத்துனேன். அண்ணன் கூட ரொம்ப ரசிச்சு மேடைல புகழுந்தீங்க.”

அதெல்லாம் இருக்கட்டும். என்ன வேலையா வந்தீங்கநு சொல்லுங்க

பையனுக்கு படிப்பு ஏறல. சரி கழுதை துணி பாக்டரி பார்த்துகட்டுமேநு அனுபிச்சேன். இந்த முதேவி அங்க இருந்த ஒரு புள்ளைய கசமுசா பண்ணிட்டான். விஷயம் பெரிசாகி பேப்பர்ல கூட வந்திச்சு. ஆயுள் தண்டனை உறுதி நு சொல்றாங்க. அண்ணன் மனசு வெச்சா என்ன வேணும்னாலும் செய்யலாம். அண்ணனை நம்பி வீட்டுகாரி கிட்ட கூட புள்ளைய காபாத்துவேன்னு வாக்கு கொடுத்துட்டேன்.(விசும்புகிறார்)”

உங்க புள்ளை செஞ்சது தப்பு தானே.”

நான் இல்லைங்கல. ஏதோ வயசு பையன் ஒரு வேகத்துல செஞ்சுட்டான். நான் பணம் தரேன்னு அந்த பொண்ணோட அம்மாகிட்ட சொன்னேன். ஆனா அந்த கிழவி நீதி நியாயம் நு சினிமா டயலாக் எல்லாம் பேசுது. அண்ணன் மனசு வெச்சா இந்த சிக்கல்லேருந்து காப்பாத்தலாம்.”

இதெல்லாம் சிக்கலுங்க. உங்க புள்ளைய காப்பாத்த போயி என் இமேஜ் போச்சுநா நான் என்ன பண்ணுவேன். நீங்க கிளம்புங்க.”

அண்ணேன். அப்பிடி சொன்னீங்கனா நான் எங்கனே போவேன்.(கண்ணீர்) எவ்வளவு செலவானாலும் பரவாலை நே. என் புள்ளைய காப்பாத்துங்க சாமி.”

யோவ் யோவ். கால்ல வந்து விழாதயா. சரி. ஒரு 60 லட்சம் செலவாகும். முடிஞ்சு வெளில வந்த உடனே உன் புள்ளைய மேட்டர் அமுங்கர வரைக்கும் கொஞ்ச நாள் வெளிநாட்டுல இருக்க சொல்லு.”

அண்ணனே. உங்களுக்கு கோவிலே கட்டலாம்னே.”

அதெல்லாம் வேண்டாம். வெளிநாட்டுக்கு போயாவுது உன் பையன அடங்கி இருக்க சொல்லு. அங்க எடாகுடமா பண்ணினா அவனை காப்பாத்த என்னை மாதிரி நல்லவன் எவனும் கிடைக்க மாட்டான்


இன்று


இங்கிருக்கும் என் அருமை சகோதரி, உங்கள் அன்புஅக்காபற்றி நான் சொல்லியாக வேண்டும். தனக்காக வாழாமல் உங்களுக்காகவே வாழுகிறாள் இந்த அன்பு சகோதரி. இங்கு நாடாளும் குடும்பத்துக்கும் இவருக்கும் எவ்வளவு வித்தியாசம்.தன்னுடைய இறந்து போன தாத்தா தவிர இவர் எல்லாரையும் ஏதோ ஒரு பதவியில் அமர்த்திவிட்டார். ஊரெங்கும் இவருக்கு இருக்கும் சொத்து பற்றி உங்களுக்கு தெரியாதா?”

இந்த ஊழல் பெரிச்சாளிகளுக்கா உங்கள் வாக்கு?”


போன தேர்தலில்


இந்த அம்மையார் ஆடிய ஆட்டங்களெல்லாம் நாடறியும். குடும்பம் குட்டி இல்லாத இவருக்கு என் இத்தனை சொத்து, இத்தனை நகை, இத்தனை கார் எல்லாம்? ஒட்டு போட்டவனோ வெய்யிலில் காய்ந்து கொண்டிருக்க, இவருக்கு மட்டும் சொகுசு பங்களாவா?”

இங்கிருக்கும் .. மா. . கட்சி தலைவர், நம் அருமைஅப்பாஅவர்கள் பற்றி நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா? தான் மட்டும் இல்லாமல், தன குடும்பத்தையே நாட்டு பணியில் இடுபடுத்தியிருக்கும் இவர் நாட்டுபற்றை பற்றி சொல்லுவதா, அல்லது வேறு பாஷையை ஒழித்து தமிழை மட்டும் நாம் பயில வேண்டும் என்று என்னும் அவர் தமிழ் பற்றை பற்றி கூறுவதா?”


இன்று


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறியதிலும் சிறிய சிறுபான்மியருக்கு பத்து சதவிதம் ஒதுக்குவோம் என்பதை பெருமையுடன் தெரிவிக்கின்றேன்.” (கரகோஷங்கள்)

கலப்பு திருமணத்திருக்கு பத்தாயிரம் கட்சி நிதியிலிருந்து அள்ளித்து ஜாதி இல்லாத சமுதாயம் உருவாக்குவோம்” (கரகோஷங்கள்)


சில நாட்கள் முன்பு


இது என் சொந்த விஷயம் சித்தப்பா. நீங்க இதுல தலையிடாதீங்க.”

நான் ஒரு அரசியல்வாதி. குடும்பத்துல இருக்கிற உன் பிரச்னை, பொது வாழ்கையில என் பிரச்னை.”

அந்த பொண்ணு வேற ஜாதி. இத தவிர வேற எந்த குறையும் இல்ல. அப்புறம் எதுக்கு எல்லாரும் இப்படி கூப்பாடு போடறீங்க.”

அது ஒன்னு போறாது எதிர் சாதியும் எதிர் கட்சிகார பயலுகளுக்கு என்னை கவுக்க? அந்த புள்ளைய மறந்திடு

மேடைல வாய் கிழிய பேசறீங்களே ஜாதி இல்லாத சமுதாயம் அமைப்போம்நு. அதெல்லாம் என்னது?”

எவனடா கூறுகெட்ட பயல இருப்ப போல இருக்கு? என்னிக்கி நாங்க சொன்னதை செஞ்சிருக்கோம். இந்த பேதங்கள் எல்லாம் ஒழிஞ்சுட்டா அப்புறம் நாங்க மாடு மேய்க்க போக வேண்டியது தான். தமிழ் தமிழ் நு கூட தான் சொல்றோம். தமிழ்காக உயிரை கொடுப்போம்னு சொல்றோம். உண்மையில ஒரு (தலைமுடியை இழுக்கிறார்) . புரிஞ்சுதா. இப்போ நீயும் என் புள்ளைங்களும் தஸு புஸ்ஸு நு இங்கிலிஷ்ல பேசறதில்ல?”

இதெல்லாம் யாரும் தட்டி கேட்கமாட்டாங்க நு நம்பிக்கை உங்களுக்கு.”

அப்பிடி தான் இத்தனை வருஷம் அரசியல் பண்றேன். இப்போ டி.வி. தரோம்னு சொன்ன உடனே பல்லை இளிச்சுக்கிட்டு ஒட்டு போட்டானுவ. இத்தனை பேரு வாக்குறுதி தராங்களே, யாராவுது ஊழல் இல்லாத ஆட்சி, பாதுகாப்பான ஆட்சி அப்புடி நு சொல்றாங்களா? இல்லை. நமக்கு லஞ்சம் பழகி போச்சு. லஞ்சம் வாங்கதவனுக்கு பேரு……பொழைக்க தெரியாதவன். ”

இது ஆணவம் சித்தப்பா.”

இல்லை. இது நம்பிக்கை. உன்னை மாதிரி கேள்வி கேக்கறவன் ஒட்டு போடறது இல்லை. ஒட்டு போடறவன் கேள்வி கேக்கிறது இல்லை.”


இன்று


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவச கம்ப்யூட்டர் வழங்கி நாட்டை முன்னேற்றுவோம் என்பதை மட்டும் கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.”


கூட்டத்தில்


கம்ப்யூட்டர் வெச்சு நாம என்ன பண்ண. பேசாம ஏசி கேக்கலாமா? வெயில்ல இருக்க முடியல.”

ஆமா. பேன் ஓடவே இங்கே கரண்டு இல்லை. இதுல இவ சி போடராளாம்.”

ஏய் மக்கா. இந்த தடவை என்ன ரேட் போகும். ரெண்டாயிரமாவுது தேறுமா?”


மேடையில்


தலைவர் கை அசைத்தவாறே உதவியாளரிடம்ஏன்டா. இன்னமுமாடா இந்த ஊரு நம்மை நம்புது.”

அது அவங்க விதின்னே