Showing posts with label குட்டி கதை. Show all posts
Showing posts with label குட்டி கதை. Show all posts

Wednesday, April 22, 2009

என்ன கொடுமை சார் இது!!!

"தம்பிஅருவாள் எடுத்துகிட்டு எங்க வேகமா போறீங்க?”

என்னை தடுக்காதீங்கன்னேஇன்னிக்கி என் அருவாள் ரத்தம் பார்க்காம விடாது.”

என்ன தம்பி தெலுங்கு பட வில்லன் மாதிரி பேசறீங்கஇப்படி பந்த் இருக்கிற நேரத்துல அருவாள் எடுத்துகிட்டு சுத்தறீங்கபோயிடுங்க தம்பி

என்னனே இன்னைக்கி பந்த்?”

என்ன தம்பி விவரம் தெரியாத புள்ளையா இருக்கீங்கஇலங்கைல அப்பாவி தமிழர்களை கொல்றாங்க இல்லை,அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு இன்னைக்கி பந்த்.”

இலங்கைல தான் அப்பாவி தமிழர்களை பல வருஷமா கொல்றாங்களேஅப்புறம் என் இப்போ திடீர்னு பந்த்?”

தம்பிஇப்படி விவரமாவும் விவகாரமாவும் பேசினீங்கஉங்க வீட்டுக்கு ஆட்டோல வருவாங்கஅதெல்லாம்இருக்கட்டும்இப்போ எதுக்கு நீங்க அருவாளோட கேளம்பிடீங்க ? “

நல்ல வேளை ஞாபக படுத்துனீங்கநான் வரேன்ன்னே.”

தம்பி இருப்பாயாரை கொல்ல அவசரமா போற?”

ஏசுநாதரை சிலுவைல கட்டி சித்ரவதை செஞ்சாங்களேஅவங்களை கண்டந்துண்டமா வேட்ட போறேன்.”

என்னை பார்த்தா கேனயன் மாதிரி தெரியுதாஇந்த சம்பவம் நடந்து எத்தனை நூறு வருஷம் ஆச்சுஇப்போ வீராவேசமா கிளம்புனா என்ன அர்த்தம்?”

இது நடந்து பல வருஷம் ஆகி இருக்கலாம்ஆனா நான் நேத்து தானே பைபிள்ல படிச்சேன்.”