"ஒவ்வொரு தடவையும் வோட்டு போடும்போதும் இந்த தடவையாவது நமக்கு நல்லது நடக்கும் நு மக்கள் நினைக்கிறாங்க". முதல்வனில் சுஜாதாவின் இந்த கூர்மையான வசனங்கள் மிக உண்மையானவை. ஒவ்வொரு தேர்தலின்போதும் நாம் நம்பிக்கையோடு விரலில் மை வைத்து கொள்கிறோம். ஆனால் ஐந்து வருடங்கள் முடிந்து மூஞ்சியில் கரி தான் பூச படுகிறது. கிட்ட தட்ட சலிப்பும் ஏமாற்றமும் மிச்சம் உள்ள தேர்தலில் களத்தில் "எவன் நின்றால் என்ன" நு சலிச்சுகிறது நியாயம் தான்.
இப்பொழுது இருக்கும் கலைஞர் ஆட்சியிலும் இதே கதி தான். மத்த ஆட்சியில மட்டும் என்ன வாழுந்துதாம்ன்னு நீங்க நினைக்கிறது புரியுது. "இதோ நான் ரிடையர் ஆக போறேன்"நு ஒரு அறிக்கையிலும் , "நான் அப்பிடி சொல்லவே இல்ல" நு இன்னொரு அறிக்கையிலும் மெகா சீரியல் மாமியார் போல்
மக்களை குழப்புகிறார். சரி ஆட்சியில் தான் அடுத்தது யாருன்னு குழப்பம்நா இவரு குடும்ப ஆட்களும் அவர்களின் சண்டையும் தமிழ் மெகா சீரியலில் வரும் சதிகளையும் குள்ளனரித்தனங்களை விடவும் அதிகமானவை.
அவன் அவன் ஒரு குடும்பத்துல இருக்குற வம்பயே சமாளிக்க முடியல, ஆனா இவரு திறமையா ரெண்டு போண்டாடிகளையும்(ஆபீசியல் நம்பர்) அவரகளுடைய வாரிசுகளையும் சமாளிக்கிறார். தன்னுடைய பேச்சாற்றலாலும், வசன பானங்களையும் தொடுத்து கிட்டத்தட்ட அரை நுற்றாண்டு நிறைய சம்பாதித்துவிட்டார்.....நான் மக்கள் நம்பிக்கைய சொன்னேங்க....நீங்க எதுவும் தப்ப நினைகல்லயே? இத்தனை ஆட்சி மற்றும் குடும்ப பிரச்சனைக்கும் இடையில் இவர் "கலைஞரின் இளைஞன்" மாதிரி வெற்றிகரமான(?) படங்களுக்கு வேற வசனம் எழுதி தரதை பார்க்கும்போது "இந்த ரணகளதுளையும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா" நு நினைக்காம இருக்க முடியல.
குடும்ப சொத்து வெளில போக கூடாதுன்னு அடுத்த வாரிசுகளுக்கு தயா"நிதி", அருள்"நிதி", உதய"நிதி" நு வெச்சுட்டாரு போல. இனிமேல் வரவங்களுக்கு அநேகமா கட்சி"நிதி", தேர்தல்"நிதி" நு பேரு வெச்சாலும் ஆச்சர்ய படறதுக்கு ஒன்னும் இல்ல. தமிழனின் பலவினமான ஆசையானது இலவசம். இருபது ரூபா சோப்பு வாங்கினாலே ரெண்டு ரூபா சீப்பு எதிர்பார்க்கிற நமள்ள சரியாய் புரிஞ்சு போன தேர்தலில் வெச்சாரு ஒரு செக். அதுதான் இலவச டிவி. ஆனா அதே டி வீ ல ராஜாவின் ராசலீலைகள் சென்றடைந்தது சொந்த செலவில் சூன்னியம் வெச்சுகிட்ட மாதிரி ஆச்சு.
அநேகமா இந்த தேர்தலில் இலவசமா IPAD 2 தருவாங்கன்னு உடன்பிறப்புகள் நாக்கை தொங்க போட்டு இருக்கிறார்கள். ஒரு இடை தேர்தலில் இவர் கட்சியினர் அறிமுகபடுத்திய "வோட்டு போட்டா காசு" திட்டம் பட்டையை கிளப்பியது. அட என்னங்க ...பின்ன என்னிக்கி நம்ம ஊருல 80% சதவிதம் வாக்கு பதிவாச்சு சொல்லுங்க? தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தறது பீகாரை விட கஷ்டம்நு தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் சொல்லுது. அநேகமா நாசிகில அச்சாகிற பணம் பூரா நம்ம ஊருல தான் செலவாக போகுதுன்னு நினைகிறேன்.
அநேகமாக நரிக்குறவர்கள் தவிர எல்லாரையும் உசுபேத்தி ஒரு பாராட்டு விழா எடுக்க விட்டார்கள். அதிலும் சன் டிவியில் இவர் அறிக்கையை இப்பொழுது படிக்கும்போதும் "மச்சான் இந்த வாட்டி நான் ஜெயச்சா என்ன பண்ணுவேன்...கேளேன்...மச்சான் நீ கேளேன்...மாப்பிளை நீயாவது கேளேன்" நு கெஞ்சற மாதிரி தான் இருக்கு.
இந்த பண பலத்தையும், ஆசை வார்த்தைகளையும் மீறி 2001 போல் இந்த தேர்தலிலும் தமிழகம் ஆச்சர்ய படவைக்குமா? அக்னி நட்சத்திரத்துக்கு பிறகு தெரியும் சூடு யாருக்கு விழ போகிறது என்று.
பெயர்: கலைஞர்
வயது: அசைபோடும் வயது
பிரச்சனை: ஆசைபடும் மனது
பலம்: பேச்சாற்றல்
பலவீனம்: மெகா சீரியல் குடும்பம்
பிடித்த கதை: பராசக்தி
பிடிக்காத கதை: ஒரு ஊருல ஒரு "ராஜா" இருந்தானாம்.....
Portrait: Kannanrajiv
1 comment:
pls change the english fonts... they are not legible and even stylish..இந்த ஒசிக்காலம் (அதாங்க .. எலக்ஷன் காலம்!)இல்லாட்டி எப்போ சூடா பரிமாறுவது?? இப்போ நல்ல இருப்பது அவசியம் இல்லையா?? ரோமிங் ராமன்
Post a Comment