Monday, March 16, 2009

முரண்

சத்தியமாக சொல்லவேண்டும் என்றால் எனக்கு இந்திய வானிலை அமைப்பின் மீது துளி கூட நம்பிக்கை இல்லை. ஏன்? அட உங்கள்ளுக்கு தெரியாததா. "நடக்கும் என்பார் நடக்காது" பாடலுக்கே சரியான எடுத்துகாட்டு அவர்க்ள் தானே.


ஆனால் இன்று அப்பிடி இல்லை.


இன்று காலை அவர்கள் அறிவித்தது போல் வெய்யில் வெறித்தனமாக கொளுத்தியது.மண்டை மேல் அடிக்கும் வெய்யிலில் உண்மையாகவே பகலில் நட்சத்திரங்கள் தெரிந்தன. என் அம்மா அப்பா ஏதோ சாதாரணமாக ஊட்டியில் தேனிலவுக்கு வருவது போல் நடந்து வந்தது எனக்கு கூடுதல் எரிச்சலை கிளப்பியது.


"என்னடா உனக்கு இப்படி வியர்த்து கொட்டுகிறது?" என்று என் அம்மா கரிசனம் காட்டினாள்.


அக்கடானு வீட்டில் "சிரிப்பொலி" பார்த்து சும்மா சிரித்து கொண்டிருந்த என்னை இப்படி சுட்டெரிக்கும் வெய்யிலில் கொண்டு வந்து சுகம் காண சொல்கிறாள்.


இன்னும் அமெரிக்கா குளிர் பழக்கம் விடலையா?" என்று என் அப்பா கூடுதல் நக்கல் அடித்தார்.


அமெரிக்காவிலிருந்து வந்து ரெண்டு நாட்கள் ஆகி இன்னும் ராத்திரி பகல் நேர வித்தியாசமே எனக்கு புலப்படவில்லை. அதற்க்குள் என்னை இங்கே திருச்சியில் ஒரு முதியோர் இல்லத்துக்கு அழைத்து வந்தார்கள். திருவானைக்காவலில் ஏதோ ஒரு முலையில் இருந்த அந்த இல்லத்துக்கு வருவதற்க்குள் என் சட்டை தொப்பறையாக வியர்வையில் நனைந்தது.


"வாங்கோ வாங்கோ. சௌக்கியமா இருக்கேளா? அம்பி யாரு, உங்க முத்த பையனா?" என்று ஒரு பாட்டி குசலம் விசாரித்தாள். என் அம்மா என் முழு ஜாதகத்தையும் விநியோகம் பண்ணிவிட்டாள் என்று எனக்கு புலப்பட்டது.


"ஆமா. ரெண்டு நாள் முன்னாடி தான் அமெரிக்காலேருந்து வந்தான்" என்று என் அம்மா பிரசங்கித்தாள். நான் மழையில் நனைந்த கோழி போல் அவஸ்தையாக சிரித்தேன்.


"அம்பிக்கு இடத்தை சுத்தி காட்டுங்கோ". ஏதோ தாஜ் மகாலை காட்ட போவது போல் என் அம்மா சீரியசாக என்னை அழைத்து சென்றாள்.


அது ஸ்ரீரங்கத்து அக்ரஹாரத்து வீடுகளின் அமைப்பில் இருந்தது. அந்த திண்ணையை பார்த்தபோது மொருஞ்சாதம் சாப்பிட்டு உறங்க வேண்டும் போல ஆசையாக இருந்தது. உள்ளே சில பெரிசுகள் ரகசியம் பெசிகொன்டன. மேல் சுவரில் ஒட்டடை அடித்து ஒரு நூற்றாண்டாவுது ஆகி இருக்கும். சுவற்றில் பிள்ளையார் எறும்பு யாரையும் பொருட்படுத்தாது நேர்க்கோட்டில் ஊர்வலம் சென்றது. அங்கே இருந்த குழவிகல்லை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அதை தூக்குவதர்க்கே சிக்ஸ் பாக் ஆப்ஸ் வளர்க்கவேண்டும் போல.


மேல் கூரை கிழே இருந்த கல் தூணின் மேல் நின்றது. அந்த கல் தூணிலோ அல்லது சுவரிலோ ஆணி அடிப்பதற்கு அர்னால்டை தான் அழைக்க வேண்டும். சென்னையில் நான் வாடகைக்கு இருந்த வீட்டில் ஒரு ஆணி அடித்து அந்த சுவரில் நிலா போல போத்தல் விழுந்து அந்த வீட்டுக்காரன் என்னை சுப்ரீம் கோர்ட்டுக்கும் ஐ.நா சபைக்கும் இழுப்பதாக மிரட்டியது ஏனோ நினைவுக்கு வந்தது.


அங்கே இருந்த ஒரு தாத்தா கருமசிரத்தையாக போஸ்ட்கார்டில் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கினவர்களுக்கு "நலம். நலமறிய அவா" என்று தனது பொய் கணக்கை ஒன்று கூட்டினார். முத்து முத்தான அவர் எழுத்தை பார்த்து என் கோழி கிறுக்கல் நினைவிக்கு வந்தது. அவர் பக்கத்தில் இருந்த சம்பூரண ராமாயணம் (சமஸ்கிரதத்தில்) பார்த்து என் பூணுல் விழாவில் ஒரு பெரியவர் வந்து "அம்பி அபிவாதயே சொல்லு" னு கேட்டு நான் அப்பாவியாக "அபிவாதயே. ஆச்சா மாமா?" னு கேட்டு உதை வாங்கியது ஞாபகம் வந்தது.


ரொம்ப நேரமாக என்னை பார்த்துகொண்டிருந்த ஒரு பாட்டி, சைகை காட்டி என்னை அழைத்து "அம்பி. என்ன படிக்கற?" என்று குசலம் விசாரித்தாள்.


வழக்கமாக "ஆத்துக்காரி வரலையா?" அல்லது "குழந்தைகள் (கவனிக்க, இது plural) எங்க படிக்கறா?" போன்ற கேள்விகள் கேட்கப்படும் என்னை, பாடடி "யுத்"தாக வருணித்தது காதில் தேனாக வந்து பாய்ந்தது.


"இல்லை பாடடி. நான் வேலை செய்யறேன்".


"வெளிநாட்டுல வேலை செஞ்சுட்டு இப்பொ தான வரியா?"


"ஆமாம் பாடடி."


"அம்மா அப்பா யாரு கூட இருக்கா?"


"தனியா இங்கே இருக்கா. சொந்த வீட்டுல இருக்கா."


"அப்பிடினா இங்கே இருக்கிரவாளுக்கும் அவாளுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை."


பாட்டியின் சொல் சுட்டது. கோபம் அனலாய் வந்ததது. கிழவிக்கு என்ன திமிர்?


ஆனால் நிதானமாக யோசிக்கும்போது வலித்தது. வெறும் காசு-பணம் மட்டும் உறவை பாதுகாக்குமா? ஆசையாய் பேச ஆள் இல்லாமல் எத்தனை நாள் தவித்திருபார்கள். ஆயிரம் முறை என்னை சாப்பிட்டியா என்று கேட்க்கும் அம்மாவிடம் நான் அதை எத்தனை தடவை கேட்டுகிறேன்? வேகமான உலகத்தில் யாரு அதெல்லாம் நினைத்து பார்க்கிறார்கள். அவர் அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை, அவர்களின் போராட்டம்.


இந்த சுழலில் இருந்து மீண்டு வர என்னதான் வழி இருக்கிறது? நினைக்கும்போது நெஞ்சு கனமானது. விடை தான் காணவில்லை.


கிளம்பும்போது அப்பா கேட்டார் "என்னடா. நாளைக்கி காலைல பல்லவன்ல புக் பண்ணடா?"


"ரெண்டு நாள் இருந்துட்டு போகவாப்பா?"


என் அப்பா கண்களில் முதன் முறையாக ஆச்சரியம் மின்னியது.

12 comments:

Dimplicious said...

"அப்பிடினா இங்கே இருக்கிரவாளுக்கும் அவாளுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை."

Whoa!!Wat a thot!!Seriously true..hmmm..gets me tinkin!!really gud one..wid humour thrown here n der,its a moral wel said!!

Anonymous said...

took me a good 15 minutes to read but it was worth the question the paatti put. who are we we running from ? where are we running to?

Anonymous said...

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என் கண்ணில் நீர் தேம்பியது

என்ன தான் ஓடாக தேய்ந்தாலும் இறுதியில் சொந்த பந்தம் எல்லாம் உலகின் ஏதோ ஒரு

முலையில் தவிக்க விட்டு , நாமும் தனிமையில் தவிக்கும் வாழ்கை

என்ன தன் வாழ்கையோ?

ஆட்டிவைக்கிறது பணம் என்னும் பிசாசு
அடிமை ஆட்டம் போடுகிறோம் நாம்


Brilliant Harish. your writings touch the heart. Last I heard, thats the best type of writing!

Subramanian Ramachandran said...

title than etho award film effect thanthuchu...


otherwise...... Whoaaaaaaaaaaaa!!!!

Salute!!!

Anonymous said...

nice ! very sentimental !

KK said...

//நான் மழையில் நனைந்த கோழி போல்//

Nalla expression Thala!!! Superappu....

உங்கள் கதை மிக அறுமையாக இறுந்தது... நான் ரொம்ப நாள்ளாக யொசிக்கும் ஒரு விஷ்யத்தை கொண்ட ஒரு பதிவு.... நன்றி ஹறீஷ்...

Vg said...

Simply superb thought da.. Hats-off!!!

Preeya said...

Great one Harish.. It's a painful truth!! The humor around "abivadhaye" was cute :).

Harish said...

@Dimplicious
Thanks yaar

@Curdrice Aurora
Quite lot of questions....asked...and put :(

@Nivi
Glad u liked it. Felt it a million times.

@RSubras
Nandri thalai :)

Harish said...

@Vinay
Nandir Nanba

@KK
Romba naala yosikirom....aanaa....

@VG
Thanks yaar :)

@Preeya
Painful and obvious truth :(

Anonymous said...

mmmmmm....yup. mugathil adichadhu pola unmaiyaana pechu. Any solutions? only "girls" konda parents nilamai innum mosam...they are not even deserved to get visited by their daughter,when they are sick..because daughter has a duty calls to attend at her husband's side.No permission will be given. I knew a relative who was not even given permission to attend 13th day ceremony of her mother's demise. When will this world/ our society change?

Asusual your way of expression is so close to our hearts,harish.Best of luck. --SKM

rampantheart said...

One word, Harish! Brilliant! It almost made me cry. Keep writing! Thanks a bunch for sharing this!