"ஐயோ ராமா" என்று சொல்லி 8 மணிக்கு எழுந்தான் கௌதம். காலையில் எழுந்திருக்கும்போது அபசகுனமாக எதாவுது சொல்லி எழுந்திருக்க கூடாதுன்னு அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அவசர அவசரமாக பல் தேய்த்து, சோப்பு போட்டு முகம் அலம்பி கொண்டான். குளியல்? அவசர வாழ்கையில இதெல்லாம் சகஜமப்பா. அப்புடியும் கண்ணாடியில் அவன் முஞ்சி பார்த்தால் அவனுக்கே தூக்கம் வந்தது.
கௌதமுக்கு தன் மேலேயே எரிச்சலாக வந்தது. போன வாரமே துணி துவைத்திருந்தால் இன்னைக்கி இப்படி முழிச்சிருக்க வேண்டாம். எல்லா துணிகளில் இருந்தும் ஏதோ ஆந்த்ராக்ஸ் ரேஞ்சுக்கு வாடை அடித்தது. இருந்தது ஒரு கிரீம் கலர் பாண்ட் மற்றும் கருப்பு கலர் சட்டை. மழை பெய்ஞ்ச சென்னைல கிரீம் கலர் பாண்ட்? இன்னைக்கி நாம முழிச்ச நேரமே சரி இல்லைன்னு நினைத்துகொண்டான்.
வேண்டா வெறுப்பாக அந்த பாண்ட் போட்டு வெளில வந்து பார்த்து கௌதம் பயந்தான். கரு மேகங்கள் பயமுறுத்தி சுழுந்து கொண்டன. நேற்று இரவு பெய்த பேயி மழைக்கு தெருவெங்கும் சேறும் சகதியுமாக இருந்தது. இப்பொழுது சாரல் அடித்து கொண்டிருந்தது. இந்த லட்சணத்தில் கண்டிப்பா ஆபிஸ் போயே ஆகணுமா? "எழுந்துரு கௌதம். எழுந்திரி" னு தனக்கு தானே சொல்லி கொண்டு அவன் புறப்பட்டான். ஏதோ பூமிக்கு அடியில் இருக்கும் கண்ணி வெடியை மிதிக்காம நடப்பது போல் அவன் ஒவ்வொரு அடியும் மெதுவாக வைத்தான்.
இதுல சேற்றை வேற தாண்டி தாண்டி போக வேண்டுமாம். ஒரு வேளை அஞ்சு ஜார்ஜ் இங்கே தான் ஹை ஜம்ப் கத்துகிட்டாங்களோ போன்ற மொக்கை யோசனைகள் அவனுக்கு தோன்றியது. பொறுமையாக ஒவ்வொரு அடி வைப்பதுக்குள்ளேயும் கடுப்பாக இருந்தது. அப்பொழுது தான் பல்சரில் ஒரு அல்சர் பிடித்தவன் வேகமாக வந்து சேற்றை அவன் பாண்ட் மீது டிசைன் போல் அடித்தான்.
"நன்றி நண்பா. உங்க போன் நம்பர் தாங்களேன்" என்றான் இவன் சத்தமாக. என்னடா அம்மா அப்பாவை திட்டாமல் இவன் போன் நம்பர் கேகராநேன்னு அந்த பைக்க்காரன் மெண்டிசை பார்த்த இந்திய பேட்ஸ்மேன் போல் முழித்தான்.
"ச்சார்ர்ர்ர்"னு இழுத்தான்.
"இல்ல. நாளைக்கி வீட்டுலேருந்து கிளம்பும்போது உங்களுக்கு SMS அனுப்பறேன். பைக்ல வந்து நாளைக்கி வேற பாண்ட்ல சேர் அடிக்கலாம் பாருங்க".
பார்ட்டி எஸ்கேப்!!!! முனுமுனுத்தவாறே கௌதம் தன் கர்ச்சிப்பால் அந்த சேற்றை துடைக்க முயன்றான். ஆஹா....பஸ்க்கு நேரம் ஆகி விட்டது. அவன் நடையை வேக படுத்தினான்.
அச்சச்சோ!!! பஸ் ஸ்டாப்பில் அவன் கூட்டாளி யாரையும் காணும். எங்க இருக்காங்கனு போன் பண்ணி கேக்கலாம்ன்னு பார்த்து போன் எடுத்த அதுல சார்ஜ் இல்லை. ஆமா, விடிய விடிய கடலை போட்டும் சார்ஜ் இருக்கிறதுக்கு அது என்ன அலாவுத்தின் அற்புத விளக்கா. பக்கத்து டவுன் பஸ் ஸ்டாப்க்கு நடையை கட்டினான் கௌதம். ரோடா இது? நிலா மாதிரி அத்தனை குண்டு குழி. தேர்தலுக்கு வேற 2 வருஷம் இருஉகு. அப்புடின்னா ரோடு கண்டிப்பா 2 வருசத்துக்கு 2 மாசம் முன்னாடி தான் போடுவாங்க. இங்கே இருக்கற தெருவுல ரோடு போட வக்கை காணும். இவங்க தான் ராமேஸ்வரத்துல ராமர் பாலம், இயேசு பாலம் எல்லாம் கட்ட போறாங்களாம். நல்லா கேகராங்கய்யா டிடைல்லு.
அவன் ஆபிஸ்க்கு பக்கத்தில் போகும் ஒரு பஸ் வந்தது. ஏற்கனவே புளி மூட்டை போல் அதில் ஆட்கள் ஏறி இருந்தனர். இந்த டிரஸ் போட்டு இந்த பஸ்ல தான் போகனுமா? ஆட்டோவில் போகலாம்நு பார்த்தா அவன் சொத்தையே எழுதி தர சொல்றான். சரி...என்ன பண்ண. கடுப்பாக அவன் பஸ் படியில் தொங்கினான். கடைசியாக கல்லூரியில் படிக்கும்போது அந்த முட்டைக்கன்னு மாதவியை இம்ப்ரச்ஸ் பண்ண தொங்கியது. ஏதோ ஒரு கஸ்மாலம் அவன் கால் மேல் கல் வைத்து மிதித்தான். 1500 ரூபா ஷுக்கு ஆப்பு வைகிறானேனு கௌதமுக்கு கடுப்பு.
தெருவெல்லாம் எல்லாரும் கஷ்டப்பட்டு நடக்கிறதை பார்த்து யோசித்தான் கௌதம். இதே மழை பெய்ஞ்சா விவசாயி சந்தோஷப்பட்டு ஆனந்த தாண்டவம் ஆடுவான். நகர மக்கள் எல்லாரும் இதே மழையை கரிச்சு கொட்டுவார்கள். தெருவெல்லாம் சேர் சகதி, குப்பை, கொசு. எந்த பிரச்சனை வந்தாலும் இந்தியனுக்கு "அட்ஜஸ்ட் மாடி" தான்.
ஒரு வழியாக ஆபிஸ் வந்தாச்சு. அவன் வேக வேகமாக முகம் அலம்ப உள்ளே நுழையும்போது...ஆச்சரியம். என்ன....ஒரு பயலையும் காணும்? பயந்தவாறே அவன் ஆபிஸ் போன் எடுத்து நினைவில் இருந்த ஒரே என்னை அழுத்தினான்.
"டேய் கௌதம்..என்ன இப்போ ஆபிஸ் லேருந்து பேசற?"
"ஆபிஸ் லேருந்து பேசாம ஜார்ஜ் புஷ் ஆபிஸ்லேருந்து பேசினா ஒத்துப்பியா?"
"லூசு...இனிக்கைக்கி ரொம்ப மழை பெயிஞ்சதுனால் லீவு விட்டுடாங்க."
இதென்ன அவ்வையார் ஆரம்ப பாடசாலையா, மழை பெய்ஞ்சு லீவு விடறதுக்கு?
"உனக்கு ரொம்ப நேரமா ட்ரை பண்றேன். நம்பர் கிடைக்கல. ஹலோ...கௌதம்...கௌதம்...எதாவுது பேசுடா."
For those who dont understand tamil....enjoy Michael Jackson crooning in Tamil below!!!!!!!