காற்பந்து முடிஞ்சாலும் அதுக்கு சம்பந்தமே இல்லாத ஹீரோ பாலுடைய புகழ் மங்கவில்லை. ஒரு வேளை பாலை நம்ம ஊருக்கு கடத்திவந்தா அவரை வெச்சு எப்படி பிசினஸ் பண்ணலாம்??
உலக கோப்பைக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு, ஆனா நம்ம பசங்க விளையாடறதை பார்த்தா உலக கோப்பையை விடுங்க, நமக்கு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது போல இருக்கே :(
ஆனாலும் ஒபாமா ரொம்ப பாவம். ஒரு மனுஷனுக்கு சோகம் வரலாம், ஆனா சோகமே வாழ்க்கை மாறினதுக்கு இவருக்கு தான். ஒன்னு மாத்தி ஒன்னு விடாம யாராவது அவரை படுத்தறாங்க.
Craig Ferguson சொன்னது போல்
By this point, the gulf of mexico "spill" not even an 'oil spill' anymore. Spill is a little accident that can easily be cleaned up. Calling this a 'spill' is like calling World War II a 'tiff.'
ஹ்ம்ம்...நம்ம ஊரா இருந்தா ஒரு இட ஒதுக்கீடு அறிவிச்சுட்டு நிம்மதியா இருக்கலாம். (புரியாதவர்கள் WIKILEAKS பற்றி படிக்கவும்)
ஒரு மனஷனுக்கு எப்படி எல்லாம் வாழ்வு வருது பாருங்க. சன் பிச்சர்ஸ் எடுத்த "வெற்றிகரமான" வேட்டைக்காரன், சுறா நடிச்சு கொஞ்ச நாள் படுத்த மாட்டார்னு பாத்தா, ஷங்கர் திடீர்னு "3 Idiots" ரீமேக் பண்றதா சொல்லிட்டார்.
அது எப்படிங்க படம் ரிலீசான அடுத்த நாளே "சூப்பர் ஹிட்" போஸ்டர் ஓட்டறாங்க? ஒரு வேளை அது Templateஆ இருக்குமோ :P. ரீமேக் படம் எடுக்க தான் ஏற்கனவே "ரீமேக்" ராஜா இருக்கார். ஹ்ம்ம்...ஆட்டம் ஜாஸ்தி ஆய்டுமே.