"தம்பி, அருவாள் எடுத்துகிட்டு எங்க வேகமா போறீங்க?”
“என்னை தடுக்காதீங்கன்னே. இன்னிக்கி என் அருவாள் ரத்தம் பார்க்காம விடாது.”
“என்ன தம்பி தெலுங்கு பட வில்லன் மாதிரி பேசறீங்க. இப்படி பந்த் இருக்கிற நேரத்துல அருவாள் எடுத்துகிட்டு சுத்தறீங்க. போயிடுங்க தம்பி“
“என்னனே இன்னைக்கி பந்த்?”
“என்ன தம்பி விவரம் தெரியாத புள்ளையா இருக்கீங்க. இலங்கைல அப்பாவி தமிழர்களை கொல்றாங்க இல்லை,அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு இன்னைக்கி பந்த்.”
“இலங்கைல தான் அப்பாவி தமிழர்களை பல வருஷமா கொல்றாங்களே, அப்புறம் என் இப்போ திடீர்னு பந்த்?”
“தம்பி, இப்படி விவரமாவும் விவகாரமாவும் பேசினீங்க, உங்க வீட்டுக்கு ஆட்டோல வருவாங்க. அதெல்லாம்இருக்கட்டும், இப்போ எதுக்கு நீங்க அருவாளோட கேளம்பிடீங்க ? “
“நல்ல வேளை ஞாபக படுத்துனீங்க. நான் வரேன்ன்னே.”
“தம்பி இருப்பா. யாரை கொல்ல அவசரமா போற?”
“ஏசுநாதரை சிலுவைல கட்டி சித்ரவதை செஞ்சாங்களே, அவங்களை கண்டந்துண்டமா வேட்ட போறேன்.”
“என்னை பார்த்தா கேனயன் மாதிரி தெரியுதா? இந்த சம்பவம் நடந்து எத்தனை நூறு வருஷம் ஆச்சு. இப்போ வீராவேசமா கிளம்புனா என்ன அர்த்தம்?”
“இது நடந்து பல வருஷம் ஆகி இருக்கலாம். ஆனா நான் நேத்து தானே பைபிள்ல படிச்சேன்.”
8 comments:
rotfl :D :D :D raasa epdi raasa ithelam :D :D chaancela
இத படிச்சாவுடனே எனக்கு உன்ன கொல்லனும் போல இருக்கு.. எடுரா அருவாள! :P
Medical shop close pannitta.. aana.. Tasmac kada open pannitaa.
dhool :)
Enna kodumai Harish ithu??? :D
Brilliance!
Exactly my thoughts too when I read about the Bandh.
Politics, politics politics
emarava irukaravaraikum ematharava irundhunde dhan irrupa!
i would have to disagree with you, as far as ur analogy is concerned, but damn good imagination :D :D
hei kathai supr. neththu thaan baibil padichchingalo naan kooda indru thaan unga kathai padiththen ;)
Post a Comment