அவன்: "ஏய்...நீ ரொம்ப அழகா இருக்க."
அவள்: "எப்போ பாரு ஜொள்ளு தானா? உங்களுக்கு வேற ஒன்னுமே தெரியாதா?"
அவன்: அப்படி கோச்சுக்கும்போத்தும் கூட நீ அழகா தான் இருக்க தெரியுமா?
அவள்: இதே வார்த்தை தானே அந்த கீழு தெரு சரோஜா கிட்டேயும் சொன்னீங்க?
அவன்: ஐயோ. இது என்ன வம்பா போச்சு. நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். என் மேல இப்படி அபாண்டமா பழி போடற.
அவள்: எனக்கு எல்லாம் தெரியும். சும்மா இந்த புருடா எல்லாம் விடாதீங்க.
அவன்: ஹ்ம்ம்...நான் சொன்ன நம்ப மாட்ட. சரோஜா சொன்னா மட்டும் நம்புவ.
அவள் : அப்படி தான் வேச்சுகொங்களேன்.
அவன்: இந்த மாலை எவ்வளவு வாசனையா இருக்கு தெரியுமா?
அவள்: அட. உங்களுக்கு வாசனை எல்லாம் வருமா?
அவன்: கிண்டல் தானே. ஏதோ அன்னைக்கி ஜலதோஷம் இருந்துது அதுனால உன்னை பார்க்க வரும்போது வாசனை வரலைன்னு சொன்னேன். அதையே பிடிச்சிண்டு இருந்தா எப்படி.
அவள்: பார்க்கிற மாதிரியா வந்தீங்க? வேர்த்து விறுவிறுத்து...யப்பா. உங்க கிட்ட கூட நெருங்க முடியல.
அவன்: பின்ன? வேலை முடிஞ்சு வந்தா உங்க ஊருல என்ன சந்தனமும் ஜவ்வாதும் கலந்தடிச்ச வாசனையா வரும்?
அவள்: பண்றதை எல்லாம் பண்ணிட்டு நல்லா சாக்கு சொல்லுங்க.
அவன்: ஒரு அப்பாவி மேல இப்படி அநியாயமா பழி போடறியே?
அவள்: யாரு? நீங்க அப்பாவியா? இத்தனை பேரு நம கல்யாணத்துல சுத்தி இருக்காங்க, அப்போ கூட சில்மிஷம் பண்றீங்களே, நீங்களா அப்பாவி?
அவன்: என் என் ...என்ன பண்ணிட்டேன்?
அவள்: உண்மையை சொல்லுங்க? உங்க காலால நீங்க என் காலை வருடல?
அவன்: ஒரு இளைஞன் ஒரு இளைஞ்சி கை காலை பிடிக்கிறது ஜகஜம். ஏன்னா இது வாலிப வயசு.
அவள்: வாலிப வயசா? இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி நக்கல் தான். 3 கழுதை வயசாச்சு உங்களுக்கு.
அவன்: இப்படி எல்லாம் வெட்ட வெளிச்சமா உண்மையை வெளில சொல்ல கூடாது. உன் புருஷன் மானம் தானே போகுது.
அவள்: சரி...விஷயத்துக்கு வருவோம். என்ன வாசனை வருது உங்களுக்கு?
அவன்: ஹ்ம்ம்....நல்ல ரோசாப்பு வாசனை வருது. அது கூடவே ஏதோ தூக்கலா ஒரு வாசனை. அநேகமா உன்கிட்டேருந்து தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
அவள்: ஹையோ. உங்களை திருத்தவே முடியாது.
அவன்: உண்மையை சொல்லு. உனக்கு மனசுக்குள்ள குளிர்ச்சியா இல்லை? பொய் சொல்ல கூடாது.
அவள்: (தயங்கி) இருக்கு......
அவன்: பார்த்தியா. பிடிச்சிருக்கு. ஆனா வெளில பண்ற பந்தா எல்லாம் ஏதோ ஒன்னுமே பிடிக்காத மாதிரி தான்.
அவள்: ஹீ ஹீ. ஆமா...இத்தனை பேரு நாம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெக்கிறாங்களே, மழை பெய்யும்ன்னு நினைக்கிறீங்க?
அவன்: மழை பெய்யனும்னா மரம் வேணும். அந்த மரத்தை எல்லாம் கட்டிடம் எழுப்பறவன் வேட்டிடான். ஏறில இருந்த தண்ணியையும் மணலையும் இவனுங்களே லாரில அனுபிச்சாங்க. அப்புறம் உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணினா மட்டும் எப்படி மழை பெய்யும்??????
அவள்: இதோ வரான் பாருங்க என் எஜமான். பரதேசி!!!! மனசாட்சியே இல்லாம அவ்வளவு துணியை என் முதுகுல ஏத்தறான் படுபாவி.
அவன்: கவலை படாதே செல்லம். அடுத்த ஜன்மத்துல நாம மனுஷனா பொறந்து, அவன் நம்ம மாதிரி கழுதையா பொறக்கணும், நம்ம கிட்டயே வேலைக்கி சேரனும். மவனே! அதுக்கு வால்ல வெடி வெச்சு கொளுத்தி ஓட ஓட விரட்டறேன்.
அவள்: வேணாங்க. நமக்கு எதுக்கு இந்த வீணா போன மனுஷ பிறவி. கொறைஞ்ச பட்சம் நாமளே நம்மோட இனத்தை வேட்ட்றதும் கொல்றதும் இல்லையே.
அவன்: நமக்கு இருக்கிற அறிவு இந்த கழுதைங்களுக்கு இல்லாம போச்சே.
இரண்டு பெரும் சிரிக்கிறார்கள்....சாரி....கனைக்கிறார்கள்.
11 comments:
rotfl..:D:D:D:D:D:D i was imagining u with u-know-who first..ending justified it :D :D :D
:D :D :D too good.:D
very true.really!They are better off as donkeys .manushanukku mattumdhaandhan "MEAN" aa behave saiya mudiyum . I just love the way you express.Keep going Harish.
Thot it was jus a tamil version of ur "he-she" posts til I read abt "gettin marryd-rain" part!!Hmmm...gud one!!Ur usual style na!!Oh even a donkey's romance seems cute nowadays!!!Aanaa unga thought-provokin posts kku oru alavae illa..indha post la kuda u hv made ppl tink wid d lil nuances in the end!!
:) :) funny funny.
thala.. Inglipees, Indi, ippo tamil.. ungala purinjikirave mudiyale.. awwwww..
aama.. indha comment box eppadi vandhudhu.. saw in Gils blog too.. gimme the code plz..
Top Tukker Thalaiva!!
Bulb! :(
:) ungala mattum dhan mudiyum
@gils - rotfl ha ha ha
Post a Comment