Saturday, February 03, 2007

என்னலே பாக்க !

முதல்ல என் அப்பாவுக்கு தூத்தூக்குடிக்கு மாற்றல் சொன்னப்ப நான் "அது என்ன சாத்துக்குடி மாதிரி தூத்தூக்குடி"னு கேட்டேன். உண்மைல அந்த ஊருக்கு ஊத்திக்குடினு பேரு வெச்சிருக்கனும். எனக்கு ஞாபகம் இருந்து என் வீடு பக்கதிலே ரெண்டு மதுபானக் கடை இருந்துச்சு. கலாம் நாம எல்லரும் நல்ல குடிமகனா இருக்கனும்னு சொன்னதை எத்தனை பேரு தப்பா புரிஞ்சு வெச்சிருக்காங்கன்னு அப்பத்தான் தெரிஞ்சுது.

தென் தமிழ்நட்டுக்கு முதல்ல வந்தப்ப அந்தப் பேச்சுவழக்கு ஒரு எழவும் விளங்கலை. 'என்னலே நிக்க', 'என்னலே பாக்க'னு அவங்க பேசறதைக் கேட்டு என் தம்பி என்கிட்ட "ஏன்டா இந்தப் பசங்க வார்த்தைல பாதியை முழுங்கிட்டானுங்க"னு கேட்டான. அந்த 'எலேய்'ங்கறதை ஒரு ராகமா அவங்க சொல்றதே அழகா இருக்கும். தூத்துக்குடி பக்கதிலேயே திருச்செந்தூர், சந்கரன்கோயில்லாம் இருந்ததுனால என் அப்பா அம்மா வாரத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு கோவிலுக்கு போவாங்க. என் தம்பி சாதுவாக் கூடக் கிளம்புவான். நாம தான் கோயிலுக்கு சுண்டல் சாப்பிட மட்டுமே போற கோஷ்டி ஆச்சே; அதனால வீட்டுலயே இருப்பேன் ('ஹூம்... நீ எல்லாம் என் பிள்ளை'னு என் அம்மா அடிக்கடி சலிச்சுகுக்குவாங்க! :().

நான் கவனித்த வரைக்கும் தென் தமிழநாட்டுல சாதிப் பாகுபாடு கொஞ்சம் ஜாஸ்தி. புதுசா ஒரு தெருவுல குடி போனப்போ கடைக்கு ஏதோ வாங்கப் போனேன். மளிகைக் கடை அண்ணாச்சி என்கிட்ட "தம்பி, நீங்க அந்த சாதியா"னு ஒரு சாதி பிரிவு பேரைச் சொல்லி கேட்டாரு. ஆகா...கெளம்பிட்டாங்கடா... அருவாளை எங்க மாப்ளே ஒளிச்சு வெச்சிருக்க? ஸ்டாண்ட் (முதுகுதான்!) ல வெச்சிருக்கியாப்பா? ஆளைப் பார்த்தா பத்துக் கொலை பண்ணிட்டு பதினொனாவது பண்ண பான்பராக் கேப்பான் போல இருந்தான்!. அது ஏங்கண்ணா அந்த மயில் மார்க் இல்ல குயில் மார்க் பேரு போட்ட முண்டா பனியன் மட்டுமே போடுறீங்க? இன்னும் அந்த உடைக்கு யாருமே காப்புரிமை வாங்கலைங்கரதும் ஆச்சரியம் தான்.

என்ன தான் சொன்னாலும் அவங்க வியாபார தந்திரம் யாருக்கும் வராது. சென்னைலியே பார்த்தீங்கன்னா பெரிய கடைகள் எல்லாமே தென்னகத்துலேந்து வந்தவங்களாத்தான் வெச்சிருப்பாங்க. உழைப்புக்கு சலிக்காத அந்த மாதிரி மக்களைப் பார்க்கும்போது வியப்பா இருக்கும். கல்லூரில படிக்கும்போது பசங்க திருநெல்வேலி அல்வா வாங்கிட்டு வந்தாத்தான் ரூம்குள்ளேயே விடுவாங்க. அல்வா வாங்கலைனு சொல்லி அல்வா கொடுக்க பார்த்தா தர்ம அடிதான். அந்த இருட்டுக்கடை அல்வாவின் சுவையை எதனாலயும் ஈடு செய்ய முடியாது (நினைக்கும்போதே நாக்கு சப்பு கொட்டுது!).

ஒரு கல்யாணத்துக்கு அங்க போனபோது எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஏன்னா அங்க வந்திருந்த பெண்கள் கழுத்திலையும் அவ்வளவு நகை! (உடன்பிறவா சகோதரி அளவுக்குனா பார்த்துக்கோங்க!). இப்போ நீங்க கேட்கலாம் ஏன்டா என்னமோ உன் தாத்தா வீட்டு சொத்து பறி போகற மாதிரி பிட்டைப் போடறியேன்னு. எல்லாம் ஒரு நல்ல எண்ணம் தான். இப்படி கழுத்து நிறைய நகை போட்டுகிட்டு திரிஞ்சாங்கன்னா அப்புறம் திருடன் வந்து திருடாம பின்ன என்ன "உங்க் நகைகள் அருமை"னு வாழ்த்து மடலா அனுப்புவான்?

அந்த ஊருல இருந்த ஒரு கல்லூரி எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னா அங்க வகுப்புகள் நடந்ததா எனக்கு தெரியல (என்னமோ நடத்தினப்ப மட்டும் படிச்சு கிழிச்ச மாதிரி). அங்க படிச்ச ஒரு பையன் என் வீடு பக்கத்துல இருந்தான். அவனை சட்டை பேண்டில பார்த்ததை விட லுங்கி பணியன் ல அதிகமா பார்த்தாதா தான் ஞாபகம். எப்ப கேட்டாலும் ஸ்ட்ரைக் னு சொல்லுவான். கடைசியா சதாம் மை தூக்கிலிட்டததுக்கும் அவங்க ஸ்ட்ரைக் பண்ணினதா படிச்சதா ஞாபகம்.

என்ன தான் Dude, Yo Wassup னு பிட்டைப் போட்டாலும் அந்த 'எலேய்' ல இருந்த ஒரு அன்நியோனியாமும் நெருக்கமும் நட்பும் ஈடு செய்ய முடியாதது. எலேய் என்னலே பாக்க? போய் பின்னூட்டம் போடுலே!

43 comments:

Heidi Kris said...

nan dan first :D, but thukam coming.. so avp ;)

Syam said...

so tekunikally naan thaan firstu...

sooober harish...total ROTFL :-)

Syam said...

//அந்த ஊருக்கு ஊத்திக்குடினு பேரு வெச்சிருக்கனும்//

செம காமடி :-)

Syam said...

//எலேய் என்னலே பாக்க? போய் பின்னூட்டம் போடுலே!//

போட்டம்ல :-)

சினிமால நெல்லை சிவானு ஒருத்தர் எல்லா படத்துலயும் வந்து இந்த மாதிரி ரெண்டு டயலாக் பேசிட்டு போவார்...எனக்கு அந்த பாஷை ரொம்ப புடிக்கும் :-)

Syam said...

harish athukulla mudichuteenga...thirupi thirupi padichu sirichitu iruken.. really nice :-)

Arunkumar said...

oothikudi matter super harish.. ennama sindikkiringa :)

andha oor bashai enakkum romba pidikkum.

totally, nalla V.V.C unga post :-)

Porkodi (பொற்கொடி) said...

adhaan pottomla, innum enna paaka? :)

Porkodi (பொற்கொடி) said...

kizhinjudhu, naattamaiyum same commenta almost :(

Ponnarasi Kothandaraman said...

Tht was really hilarious :)
Great SOH :P

Unknown said...

tamil posta???? inna aachu Harish ungalukku? ;)

Unknown said...

போட்டம்ல, போட்டம்ல, போட்டம்ல!

Unknown said...

andha oothukudi matter arumai!

sema comedy!

bahut achchi thi!

Chaala baaga vunindhi!

Was really nice!

Yedho namakkum naalu baashai theriyum'nu bit'ah poten! Kandukkapadadhu! :)

Unknown said...

nalla inchu ba!

Dreamzz said...

atataa! namma oor pakkam pathi eludhi kalakareenga!

unmai thaan, "elaai" ketpathu oru thani sugam thaan! naan yen thambiya innumum appadi thaana koopidaren! ;)

Dreamzz said...

as u told, jaathi paarpathu konjam jaasthi thaan! vettitu saavathum jaasthi thaan! maaruvaanganu nambuvom!

Dreamzz said...

And south girls are cute.. sollaama vittuteenga?

Dreamzz said...

//கலாம் நாம எல்லரும் நல்ல குடிமகனா இருக்கனும்னு சொன்னதை எத்தனை பேரு தப்பா புரிஞ்சு வெச்சிருக்காங்கன்னு அப்பத்தான் தெரிஞ்சுது.
//

ROFL!

//இப்படி கழுத்து நிறைய நகை போட்டுகிட்டு திரிஞ்சாங்கன்னா அப்புறம் திருடன் வந்து திருடாம பின்ன என்ன "உங்க் நகைகள் அருமை"னு வாழ்த்து மடலா அனுப்புவான்?//

ஏலேய், உனக்கு நல்லா தான்ல வருது comedy!

Anonymous said...

//அந்த 'எலேய்'ங்கறதை ஒரு ராகமா அவங்க சொல்றதே அழகா இருக்கும்.//
unmai dhan! madras thamizh kettu valarndhavangalukku matha ella ooru vazhakkadugalum azhaga dhan theriyum!! :( :)

Anonymous said...

Interesting....like the slang tho :P

Ganesh Ranganathan said...

I am very slow at reading Tamil, so will comment on your next blog...

sorry :-((

golmaalgopal said...

soober'nga... :)) idha padichodane en veetu pakkathula irundha oru math teacher dhaan nyabagatthukku varaar....idhey maadhiri tn'veli, tuticorin baashai dhaan pesuvaar...chance'ae illama comedy'a irukkum...

Sat said...

Oye...nee tamil-aye ezhuthu man...appa than nakkal jastiya irukku :D
kuyil mark baniyan too much...ROTFL!!!
ditto for oothikudi (edhu, bayangara kudimagan range-ku per ellam suggest panra....doubt-a irukke!)
and edhu, ponnunga naga pottu irunthatha paathiya...sight adichenu naasukka solra....piriyudhu :))

Sat said...

and profile pic potuta pola... :D
i'd say un caricature podu...nallave irukum!

Sat said...

aanalum indha nellai bashai enna paduthina paadu. i had never heard it until college. erkanave tamil thandavam aadum enakku. indha lachanathula tamil naatla irukura athana vernacular-sum thala virichu aadina college, unakku sollava venum!
and indha nellai + nagercoil gumbal, sadhigaara gumbal, en friends cricle-a idhu majority vera...ivangalukunu thani agarathiye irukanum. oru ezhavum puriyadhu, oru pakkam ivanga izhuthu izhuthu pesina innoru pakkam kongu tamil express vegathula odum, aarambam puriyum, mudivu puriyum. naduvula enna kanravinu onnum theriyadhu. thiru thirunu muzhikka vendiya thaan. indha lachanathula enakku tamil theriyadhunu indha brahaspathigal sollunga...neram da saami!

Gayathri said...

I am very slow in reading Tamil. Will read and come back. But, the main thing is, you have been tagged. :D
Visit this

Priya said...

Good one.. Epdi sirikama eruka mudium indha madhiri writeup ellam blogla pota..

Aditi said...

yep dude whasup.. that is all i understood in there

KK said...

Yele makka vanthutomle...
//ஊத்திக்குடினு பேரு வெச்சிருக்கனும்//
ROTFL!!! Semma comedy :)
Nellai thamizh and Theni thamizh semmaya irukum ketkurathuke...

neenga sollura college Pachaiyappas mathiri irukum pola irukku... Angayum yeppo paarthalum strike...

Irutu kadai halwa solli naaku oora vechuteengale....slurp slurp!

KC! said...

hey, different-a oru post potruka, this is humorous and good!! Idhu madhiriyum appapo ezhudu.

Marutham said...

Hey harish, :)
Tamil'a post..
Kalakunga...
Semma funny !! :) Had a good laugh..

Sat said...

kk;
//neenga sollura college Pachaiyappas mathiri irukum pola irukku... Angayum yeppo paarthalum strike...//
en appa padichadhu indha pachaiyappas-la thaan (my dad's a hard core chennai-ite (adopted though)!)
indha maari sonna....the reply i get is...what do u know?...u don't know what kind of ppl have passed out of my college (aama aama :D )
he attended the college at the same time as Vairamuthu (i guess)....

SKM said...

Tamil post nu pathadhum checked your URL first.sari,sari ,sirichu sirichu comment potutomlae.Good one Harish.

KK said...

@Sat - My dad also studied in Pachaiyappas... Avarum athe maathiri than...

Infact naanum before joining Engg... veetla vettiya irukomenu oru time pass'ku 2 months pachaiyappas'la Bsc Physiscs ponen... Antha 2 months la there was 3 strikes of that during one strike they broke 3 PTC buses :D

Ramya said...

unga "saathukudi..uthukudi" samma comedy.as usual kalakiteenga.

Gayathri said...

Tried a lot to read. Why not a transliterated post for tamil-reading handicapped people like me?

Harish said...

@Heidi
:-(

@Syam
Ennala mudinja varaikkum idu maadhiri ezhuda muyarchi panren :-)

@Arun
hee hee....inda oothikoodi anda oorula yaara irundaalum ottukuvaanga

@Porkodi
Wise ppl think alike :-)

Harish said...

@Ponnarasi
Thanks yaar :-)

@BSK
Thamizh la ezhuda try panren...unga aadaravu venum :-)

@dreamz
Innum narayyan ezudanum. Adutadu enda oora pathi ezhudalaam nu thinking :-)

@Bhargavi
Correcta sonnenga

Harish said...

@Duya
Thats one beautiful musical slang :-)

@Ganesh
Still reading eh :-))

@Gopal
mudalla ketkumbodu enakkum onnum puriyala

@Sat
sari sari...unmaya slli asinga padutaadae. Caricatiure avoided. Edaavudu oru cartoon daan podanum ngaradaala Jim Carrey won over poor old harish :-((

Harish said...

@Gayatri
Konjam time kodunga yaar. Ippo daan one tag finished.

@Priya
That means Mission accomplished :-))

@Aditi
Hope u enjoy the next post

@KK
Ninaikumbodu neenga solra maadhir slurp slurp...

Harish said...

@Usha
Sollita illa...maasathukku oru thamizh post. Ungala maadhiri aalunga urchaagam daan venum :-))

@Marudu
Feels so good to hear this. Inimae idu maadiri try panren

@SKM
Inda dadavai friend kitta koduttu proof chk paninen :-))

@Ramya
Thanks yaar

@gayatri
Next time onwards ur wish will be fulfilled. Thanks for that suggestion yaar.

k4karthik said...

ஏலே.. நீ நம்ம ஊர்லயா இருந்த.. நான் திருநெல்வேலி பக்கம்ல.. போஸ்ட் எல்லாம் நல்லாதாம்ல போட்ருக்க.. அப்பரம் ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காய்ங்கலா??? ஏலே.. சாப்டியா நீயி... போலே.. போய் சாப்டு வாலே... நான் அடிக்கடி வருவம்ல.. சரியா... கிளம்புரன்..

SKM said...

//Inda dadavai friend kitta koduttu proof chk paninen :-))//
yennai paathalae checking dhan ninaivu varudha?
You are writing too good pa.Don't worry about mistakes.Read your new story too.wonderful ! adhukku mela solla theriyala.

Harish said...

@K4K
welcome boss. Adikadi vaanga

@SKM
aioo...unga comment corret daanga. adunlaala daan i wanted to correct mistakes. And I am thanksful to u for that :-)