Friday, September 01, 2006

வேட்டையாடு விளையாடு

ராகவன் மெதுவாக கொட்டாவி விட்டான். இந்த துன்பமான நேரத்திலும் மனிதர்ளுக்கு கொட்டாவி வரும் என்று அவனுக்கு தோன்றவில்லை.வாசலில் இருந்த "அரசு மருத்துவமனை" என்ற எழுத்துக்களுக்கு சுதந்திரத்துக்கு முன்னால் வர்ணம் பூசி இருப்பார்கள் என்று அவன் கணக்கு போட்டு கொண்டான். பக்கத்தில் செல்லும் டாக்டரை பார்த்தபொது சின்ன வயதில் தானும் கோட்டு போட்டு வெஷம் கட்டியது ஞாபகம் வந்தது.

ம்ம்ம்ம்....ஒழுங்காக படித்திருந்தால் அவன் நண்பன் கோபால் போல் குறைந்த பட்சம் வாத்தியாராவுது ஆகியிருக்கலாம். இப்பொழுது பார்க்கும் மெக்கானிக் தொழிலில் வரும் காசு லாட்ட்ரி சீட்டு கூட வாங்க பத்த மாட்டேங்குது.

"யாருப்பா ராகவன்?பெரிய டாக்டர் கூப்பிட்டாரப்பா" என்றான் வாசலில் இருக்கும் கம்ப்பௌண்டர்.

"வணக்கம் அய்யா " கும்பிடு போட்டான் ராகவன்

டாக்டர் "என்னய்யா?உங்க அப்பாவா அது காலைல இறந்தது?"

ராகவன் "ஆமாங்க. இறப்பு சான்றிதழ் வேணும்ங்க. அது இருந்தாத்தான் மத்த நடக்க வேண்டிய சமாசாரம் எல்லாம் பார்க்க முடியும்"

டாக்டர் "சரி. சுத்தி வளைச்சு பேச வேண்டாம். ஒரு 1000 ருபா குடு. இப்பவே கைல சான்றிதழ் வாங்கிக்க".

ராகவனுக்கு கொபமாக வந்தது.இத்தனை துன்பமான நேரத்திலும் குடும்ப தலைவரை இழந்து இங்கெ இவர்கள் சோகத்தில் இருக்கும் பொழுதும் ஒரு மனிதனிடம் இவர்கள் பேரம் பேசுவதை நினைத்து அவனுக்கு வெட்கமாக இருந்தது. இந்தியன் படத்தில் சொல்வதை போல் "மத்த நாட்டில் கடமை மீற தான் லஞ்சம் வாங்கராங்க, இங்க மட்டும் தான் கடமை செய்யவெ லஞ்சம் வாங்ராங்க" ஞாபகம் வந்தது. இவர்களூகு நல்ல சம்பளம்,PF,மரியாதை,சலுகைகள் எல்லாம் கொடுத்தும் இப்படி ஏழைகளை இவர்கள் சூறையாடுவதை நினைத்து இவன் ரத்தம் கொதித்தது.

டாக்டரின் டேபிளில் இருந்த கத்தியை எடுத்து யோசிக்காமல் சதக் சதக்னு குத்தினான். டாக்டரின் வாயோரமாக வழிந்த ரத்தம் பார்த்து குரூரமாக சிரித்தான். அவனுக்கு அந்த கத்தி எடுத்து ஏதோ பரசுராம அவதாரம் போல் தோன்றியது. அந்த ஊரில் இருக்கும் போலிஸ் அதிகாரி, பஞ்சாயத்து தலைவர், இலாகா மந்திரி, சட்டசபையில் இருக்கும் அமைச்சர்கள், மந்திரிகள் இப்படி லஞ்சம் வாங்கும் எல்லாரையும் வதம் செய்ய வேண்டும் போல் தோன்றியது. வேகமாக அவன் தன்னுடய சூரசம்ஹாரத்தை செய்ய புறப்பட்டான்.

"தம்பி..தம்பி..உங்களை தான்.எங்க வேடிக்கை பார்க்கறீங்க. நேரம் ஆகுது இல்ல. சட்டுபுட்டுனு காசை கொடுத்துட்டு மத்த வேலையை பாருங்க " டாக்டரின் குரல் அவனை அவன் நினைவலைகளை விட்டு பிரித்தன. வாசலில் இருக்கும் அவன் அண்ணனிடம் காசு வாங்க வெளியில் வந்தான்.

டாக்டரின் வாயோரம் வழிந்த ரத்தத்தை நினைத்து தன்னக்கு தானே சிரித்து கொண்டான்.

26 comments:

  1. enna Indian + vettaiyadu vilayadu aduthaduthu partha effect-a? ;) Nee solradhu correctdhan, idhellam karpanai-ladhan nadakkum.

    ReplyDelete
  2. First post-ku edhavadhu reward unda?;)

    ReplyDelete
  3. @Usha
    Ambi kitta solli venumna thirunelveli lerundu alwa parcel panni anuppa solraen :-)
    Actually...naan innum inda padattai paakala...idhu verum thalaippa vechchu ezhuda patta kadhai

    ReplyDelete
  4. aiiyo..iipdi tamizh la yezhudina..ennakku eppadi puriyum..:P

    ReplyDelete
  5. eppa innadhu idhu enakku orey kattam kattama dhaan theriyudhu! :(

    No tamil fonts installed in this stupid computer in this cafe! :(

    ReplyDelete
  6. @usha, first comment ku puliodharai kidaikum :-)

    @karthik B.S, you don't need to install tamil font, right click go to Encoding and select Unicode, thats it

    harish, it was really nice, ithu thaan oru oruthar manasilum irupathu,but athat implement panna mudiyaathu, கக்கக்கபோ :-)

    ReplyDelete
  7. ennoda karpanaila andha doctora kathiyaala kuthu vadhukku mudhalla anniyanla vara madhiri torture senju vadham seyya thonum."veli naatla kadamai meera thaan lanjam;namma oorla kadamaikke lanjam" nachunu irukku.

    ReplyDelete
  8. nalla irukku kadhai! thodarndhu ezhudungal

    ReplyDelete
  9. Good one...

    i would've appriciated more if i could read atleast a word of it ! :D

    ReplyDelete
  10. ennada ithu... thooo.. thooo... thooooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  11. @Syam

    firsta aavudhu kattam kattama therinjudhu. Neenga sonnadha ketadhuku apurom adhu kooda theriyala! :)

    ReplyDelete
  12. :( i don know to read tamil..but i und its a review of vettaiyadu..

    ReplyDelete
  13. Harish,
    Yanakkum tamil padika theyriyadhu. Pls translate & update in english.

    ReplyDelete
  14. Nalla irunchi pa... :)

    ReplyDelete
  15. @Krithika

    aiyooo paavam! Ponnukku Tamil theriyadham pa. Pona pogudhu Englsishla translate panna koodadha? :D

    ReplyDelete
  16. rombo cinema pakrengalao?

    ReplyDelete
  17. @Mystery
    Ennanga aniyaama irukku?Naan kooda thaan school la thamizh la padikala :-)

    @Karthik
    Innapa ippadi sollita?Ini no more tamil stories :-(

    @Syam
    Adu thaan matter...

    ReplyDelete
  18. @ramya
    Anda dialogue marakkave midiyaadhu

    @Indianangel
    Nandri nga. Edho mudinja varaikkum muyarchi pandraen

    @Chaitu
    Sorry yaar. At times i do want to write it in my mother tongue as well :-)

    ReplyDelete
  19. @nandoo
    Enna man thuppara??

    @Krithika
    Sorry dear. Its not a review. I m yet to see the movie.

    @has to be me
    Ada paavi makka. Ittanai peryukku thamizh pesa varum aana padikka teriyaadha???

    ReplyDelete
  20. @KK
    Nandi thalai

    @Karthik
    Eppadinga translate pandradu?Hunt and Play na? :-)

    @Shree
    Enga neenga vera kaduppa kelapareenga. Oru maasama padam edhum sariya paakala. koodiya seekara idellathukkum oru mudivu kattaraen :-)

    ReplyDelete
  21. machi weighta kadhai ezhudara apdiyea eppadiyavadhu script writer agidu.. heard in hollywood script writers are paid more than the directors..then first para adhu வெஷம் illa வேஷம்..

    ReplyDelete
  22. @Arvindh
    Konja naala inda doubt enakkum irukku....btw..my tamil is too bad.
    Iduvae tatu tadumaari ezhudinaen :-)

    ReplyDelete
  23. @Story in tamil :-)

    ReplyDelete
  24. =(
    what abt us non tamilians..??

    ReplyDelete
  25. @Aditi
    Sorry yaar...after a long time i wanted to pen something in my mother tongue :-)

    ReplyDelete